அகத்தீ -பிரான சிகிச்சை
'தகை' கிழக்கு தாம்பரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16/03/25) நடந்த பிரான சிகிச்சை பற்றிய அறிமுக அமர்வில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
உடல் நலத்துடன் உலக நலத்தையும் பேணுகின்ற எளிமையான ஆற்றுப்படுத்தும் முறை. உடற்பயிற்சி மூலமாகவும், தியானம் மூலமாகவும் மற்றும் ஆழ்ந்த உணர்தளின் மூலமாகவும் உடல் மற்றும் மன குறைகளை குணப்படுத்தும் சிகிச்சை முறை. இது மற்ற மருத்துவ முறைக்கு மாற்றாக அல்லாமல் துணை புரிகிற சிகிச்சை முறை. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்து பயன் பெற்று வரும் திருமதி அரினி முருகன் இந்த பிராண சிகிச்சை முறை பற்றி மிகவும் எளிமையாக அறிமுகம் கொடுத்து விளக்கியது சிறப்பாக அமைந்தது. இவர் பிராண சிகிச்சை பற்றி மேலும் தெரிந்து கொண்டு அதை தங்கள் வாழ்க்கையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு வழிகாட்ட முன்வந்துள்ளார்.
அவருக்கு 'தகை' சார்பாக வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் 'நோயினை கொண்டாடுவோம்' கையேடும் 'இருதயத்தை நோக்கிய இரு உரைகள்' நூலும் அன்பளிப்பாக கொடுத்தோம்.
Comments
Post a Comment