Skip to main content

நெகிழி பூதம் விழிப்புணர்வு நிகழ்வு

 'நெகிழி பூதம்' 









இப்பூவுலக்கில் நெகிழி ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளை விளக்கி ஓவியம் வரைவதற்கான விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தோம்.


ஜெனிவாவில் ஆகஸ்ட் 5 முதல் 14ஆம் தேதி வரை உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்திற்கான மாநாடு நடந்தது. அதில் நம் கூட்டு எதிர்காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அங்கு நமக்காக பேசுகின்ற அனைவருக்கும் வலு சேர்க்க ஊர் கூடி ஓவியம் வரையும் முயற்சியாக இதை திட்டமிட்டோம்.


எப்போதும் போல் சிறுவர்கள் கணிசமாக பங்கெடுத்தனர். சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவில் இருந்து ஜெயஸ்ரீ அவர்கள் உலகளாவிய நெகிழி ஒப்பந்தத்தின் சாராம்சத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்குமாக வந்திருந்த அனைவரிடமும் விளக்கினார்.


சிறுவர்கள் மிக ஆர்வமாக வரைய அமர்ந்திருந்த போது எதிர்பாராத மழை சற்று ஒரு ஏமாற்றத்தை எங்களுக்கு ஏற்படுத்தினாலும், அதன் பிறகு சிறுவர்களின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விளக்குவதாக இருந்தது. அவர்கள் வரைந்த ஒவ்வொரு ஓவியமும் அடி ஆழ்மனதில் அவர்களுக்கு இருக்கும் நெகிழி பற்றியான புரிதலை எடுத்துரைப்பதாக அமைந்தது. 


நெகிழி இல்லா உலகத்தை உருவாக்க முன் வருவோம்.


10/08/25

ஞாயிற்றுக்கிழமை 

மாலை 4:30 மணி

சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்தது


தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் குழுவில் இணையவோம்


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8?mode=ac_t


அகத்தீ 

094984 88645

Comments