அகத்தீ -ஓவிய கண்காட்சி
தகை சமூக கூடத்தில் ஓவியர் சிவனேசகுமரன் அவர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியது முற்றிலும் வேறுபட்ட புதிய அனுபவமாக இருந்தது.
கருப்பு வெள்ளையை மட்டும் பிரதானமாக வைத்து வரைந்த ஓவியங்கள் கண்களுக்கு புதிய விருந்தாக இருந்தது.
" ஓவியங்கள் என்னும் போது வண்ணங்களோடு மட்டுமே தொடர்பு படுத்தி பார்த்த எங்களுக்கு இது முற்றிலும் வேறுபட்ட அனுபவம்" என்றார் இளம் ஓவியர் செந்தமிழ்.
Optical Art என்று சொல்லப்படக்கூடிய சில ஓவியங்களும், பல ஆண்டுகளாக வரைந்தவையும், நிறம், ஆற்றாமை என்று மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சில ஓவியங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்திய இடத்தை அடர்த்தி ஆக்கியது.
புதிர்களுடன் கூடிய ஓவியங்கள் வந்திருந்த அனைத்து வயதினருக்கும் ஒரு விளையாட்டாகவும் அமைந்தது ஆச்சரியம்.
முற்றிலும் புதிய பார்வையை, ரசனையை, உரையாடலை பன்முகத்தன்மையை கலைகள் மூலமாக அடுத்த தலைமுறைக்கு கடத்துவது ஒவ்வொரு கலைஞனின் கடமையாகும்.
அதை செப்பனே செய்து கொண்டிருக்கும் ஓவியர் சிவனேசகுமரனுக்கும் உடன் நின்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுவோம் !
கலை படைப்புகள் அமைதியையும் அன்பையும் பெருக்கட்டும்.
தகை
பேரன்பும் பெருங் கனவும் உள்ளவர்களுக்கான வெளி
தாம்பரம்
23/11/2025
Comments
Post a Comment