Skip to main content

வில்லுபாட்டு பயிற்சி

அகத்தீ - வில்லுபாட்டு பயிற்சி

(04/01/26)
"இங்கு உள்ளவர்களில் எத்தனை பேர் கலை இரவு பார்த்தது உண்டு ?"
ஒரு சிலர் கை தூக்கினர்.
"இதில் எத்தனை பேர் விடிய விடிய கலை இரவை கண்டுகளித்துள்ளீர்கள் ?"
யாரும் அப்படிப்பட்ட அனுபவத்தை பெறவில்லை என்றனர்.
உண்மையில் அது ஒரு பெரிய கொடுப்பினை தாம்பரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமுஎகச புத்தாண்டை வரவேற்று மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை விடிய விடிய நடத்திய கலை இரவு நிகழ்ச்சிகள் இன்றும் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
நிறைய மாறுதல்களை கடந்த சில ஆண்டுகளில் நாம் சந்தித்திருந்தாலும் இது போன்ற அற்புதமான மக்கள் கலைகளின் சங்கிலி தொடரே நாம் என்பதை ஆழமாக உணர்ந்து உள் வாங்க வேண்டும்.
'தகை' இருக்கும் இந்த இடம் மூன்றாவது தலைமுறையாக பொதுமக்கள் சமூக நலன் சார்ந்த இதுபோன்ற ஏராளமான நிகழ்ச்சிகளை கூட்டங்களை இங்கு நடத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அந்த அடிப்படையில் முற்றம் கலைக்குழு தங்களுடைய முதல் வில்லுப்பாட்டு பயிற்சிக்கு தகையை தேர்ந்தெடுத்தமைக்கு மகிழ்ச்சி. Muthurani

Comments