உறுதியாக நம்புங்கள்
"மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தே இருக்கிறது. அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டே இருக்கும் உறுதியாக நம்புங்கள்." - வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார்.
"உங்கள் அகத்தீ குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அர்ப்பணிப்போடு பம்பரமாய் சுற்றி செய்த வேலை எங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. உங்கள் எல்லோரையும் பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி, வெறும் வாழ்த்துக்கள் என்று சொல்லி செல்வது பொருத்தமாக இருக்காது. வரும் காலங்களில் உங்களோடு எப்படி இணைந்து பயணிக்கலாம் ? என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது ?" என்று நிகழ்வு நடந்து முடிந்த போது பங்கெடுத்த ஒரு பள்ளியின் தமிழ் ஆசிரியர் நம்மிடம் வந்து கூறியது நம் நோக்கம் நிறைவேறியதின் பெரும் நிறைவை கொடுத்தது. இது நமக்கு கூடுதல் பொறுப்புணர்ச்சியோடு, செயல்படுவதற்க்கான நம்பிக்கையாக இருந்தது.
கடந்த சனவரி 25 நடத்தப்பட்ட தமிழும் இயற்கையும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி நடத்துவதற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பாக தமுஎகச நடத்திய முப்பெரும் கவிஞர்கள் விழா ஆற்றல் மிகுந்த பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக இருந்தது என்றால் மிகை அல்ல. பின்னர் இப்பெரும் பணியை அவர்களால் தொடர முடியாத சூழலில், அதிலிருந்து பெற்ற பேராற்றலை சூழலியல் பார்வையோடு, மாணவர்கள் இடையே நடத்த வேண்டும் என்ற பெரும் கனவை நெனவாகுவதற்கு சில ஆண்டுகள் தேவைப்பட்டது என்பதே உண்மை.
எந்தெந்த போட்டி, பிரிவுகள், அதற்கான தலைப்புகள், அதை இன்றைய சூழலில் புதுப்பித்தல், நோக்கம் சிதையாமல் இருப்பது என்று பலவற்றை மிகுந்து கவனத்தோடு காத்திருந்து செயல்படுத்திய போது கிடைத்த நிறைவு எதனோடும் ஒப்பிட முடியாது.
1.ஆவணப்படுத்தல் - வினோத்
2.பதிவு & வரவேற்பு - சங்கர் , சிவகாமி
3.வினாடி வினா - காஞ்சனா சுப்பிரமணி
4. ஓவியம் - யாகூப், வர்ணிகா
5. நிகழ்ச்சி நெறியாளராக - அன்பு பயிற்சி மையம் கலைச்செல்வி ஸ்டாலின்
6. சான்றிதழ் எழுத உதவிய - சொர்ணா
தன்னார்வலர்களாக வித்யா, உமா, EB ஜெய், சத்யா, கலைச்செல்வன், ப்ரீத்தம், சதுரங்க போயிற்றுநர் நந்தா, அப்துல் கலாம் அறக்கட்டளையில் இருந்து ஜெயக்குமார் மற்றும் நண்பர்கள் என்று இவர்களுடன் ...
அருவி கணேஷ் மற்றும் அரண் ஜெய் இருவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற தூண்களாக இருந்து செயல்பட்டார்கள் என்றால் மிகை அல்ல. ஒரு பெரும் பட்டாளமே சுழன்று வேலை செய்யவே நிகழ்வை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
நிகழ்வு நடத்திய கிறிஸ்தராஜ நடுநிலை பள்ளியின் பணியாளர் சுரேஷ் அவர்களின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
ஓவியர் செல்வமணி அவர்கள் நம் நிகழ்வுக்காக முதல் நாள் இரவு ஒரு மணி அளவில் தூரிகையால் எழுதி வரைந்த துணி பதாகையை கொண்டு வந்து கொடுத்தது நெகிழ்ச்சியான தருணமாகும். நம் நிகழ்வின் நோக்கங்களை பல மடங்கு இவரின் படைப்பு அழகாக்கியது.
தோழர் ராம் மோகன் பால மணிநேரம் பங்கு எடுக்க பதிவு செய்த மாணவர்களின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்ய கடும் உழைப்பு செலுத்தி இருந்தார்.
நிகழ்வு அன்று விடிய காலை வரை இரவு உறங்காமல் சங்கர் தோழரின் உழைப்பு பிரமிக்க வைத்தது.
நடுவர்கள்
1. பேராசிரியர் நிர்மல் செல்வமணி - பாட்டு போட்டி
2.பேராசிரியர் பாக்கியரதி - நூல் திறனாய்வு
3.முனைவர் வெஸ்லி - கட்டுரைப் போட்டி
4.முனைவர் ஆனந்தி - கவிதை போட்டி
5.ஆசிரியர் ஜெயந்தி - கதை சொல்லு
6. ஆசிரியர் சுப்ரமணி - ஓவிய போட்டி
7. கவிஞர் கலாமதி - தனித் திறனறிதல்
8. ஆசிரியர் நித்யானந்த் மற்றும் விஜய் - கட்டுரை போட்டி
9. நண்பர் ராம்மோகன் - எதிரும் புதிரும்
10. பேராசிரியர் கிருஷ்ண பிரியா - கட்டுரை போட்டி
11. ஏ ஆர் டேக் மூலமாக புதிய தொழில்நுட்பத்தை வினாடி வினா போட்டியில் அறிமுகப்படுத்தி சிறப்பாக நடத்திய நண்பர் மாதவராஜ்
என்று துறை சார்ந்த அனுபவ மிக்கவர்கள் நடுவர்களாக இருந்து மாணவ செல்வங்களை மதிப்பிட்டது அகத்தீயின் தமிழும் இயற்கையும் நிகழ்வை பல மடங்கு சிறப்பாக்கியது.
பரபரப்பாக நிகழ்வை நடத்தி முடித்த பிறகு இளைப்பாற தோழர் சங்கர் மறுநாளே தன்னார்வலர்களுக்கு ஒலி ஆற்றுப்படுத்துதல் அமர்வு நடத்தியது புத்துணர்ச்சியாக இருந்தது.
தமிழும் இயற்கையும்" திறனாய்வுப் போட்டிக்கு, அனைத்து வழியிலும் உதவிய நன்கொடையாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களின் இந்தப் பங்களிப்பானது, போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்யவும், அவர்களைப் பரிசுகள் மூலம் ஊக்கப்படுத்தவும் பெரிதும் உதவியது. ஒரு சிறந்த நற்செயலுக்குத் துணை நின்ற உங்கள் ஈகைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
தமிழ் ஆசிரியர் அன்னபூரணி, பட்டிங் மைன்ட்ஸ் சர்வதேச பள்ளி அவர்களின் அனுபவ பகிர்வு.
"ஐயா வணக்கம். இயற்கை பாதுகாக்கப்பட வேண்டியது என்பது அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், தமிழும் இயற்கையும், இணைத்து தமிழ் மொழியில் எவ்வாறு இயற்கை பாதுகாக்கப்பட்டமை என்பதையும் மிக அழகாக வரவேற்பிலேயே நீங்கள் கொடுத்தது மிகவும் அருமை நன்றாக இருந்தது. ஐங்குறுநூற்று பாடலை கரும்பலகில் எழுதி அதையும் கண்கவர பார்க்கும்படி செய்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் தலைப்பு எங்கள் பள்ளிக்கு வந்த பிறகு தான் நிறைய விஷயங்களை நான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். சங்க இலக்கியம் என்றால் என்ன?ஓலைச்சுவடி என்றால் என்ன பணி என்று இதெல்லாம் வந்து குறிப்பிட்ட நேரத்தில் சில மாணவர்களுக்கு கூறியிருக்கிறோமே தவிர இதை ஒரு பாடமாக நான் சேர்த்துக் கொண்டு எடுத்ததே இல்லை. உங்கள் தலைப்பு கிடைத்த பிறகு அதையெல்லாம் என்னால் செய்ய முடிந்தது. இந்த தலைப்புக்கு ஏற்றார் போல் நாங்கள் இரண்டு பாடல் எழுதினோம். அந்த பாடலை தான் மாணவர்கள் இசையமைத்து பாடினார்கள். நான் உங்களுக்கு அந்த பாடலை வரிகளை மற்றும் இசையும் நான் அனுப்புகிறேன். இதுபோல நிறைய முன்னெடுப்புகளை குழந்தைகளே இயற்கை சார்ந்த விஷயங்களுக்கு முன்னெடுத்தார்கள்.. தோல் பாவை கூத்தெல்லாம் நாங்கள் நேரில் கண்டதே இல்லை நாங்கள் குழந்தைகளுக்கு தோல்பாவை குறித்து என்ற ஒன்று இருக்கிறது என்று கூறுவதற்கு நிறைய யூடியூப் சேனலில் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் நாங்கள் தோல்பாவை கூத்தை நேரடியாக பார்ப்பதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததற்கு மிகவும் நன்றி ஐயா. பள்ளியில் ஒவ்வொரு திட்டத்தையும் நிகழ்த்துவதற்கு பாடமாக கற்பிக்க அனுமதிப்பார்கள். கலைஞர்களை அழைத்து வந்து அதை நிகழ்த்த வேண்டும் என்றால் அதற்கான பொருள் செலவு யோசித்து நாங்கள் பல நிகழ்வுகளை நேரில் காட்டாமலே விட்டிருக்கிறோம். ஆனால் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ததற்கு மிகவும் பாராட்டு நன்றி.உங்கள் பணி தொடரட்டும். உங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றியும், என் பள்ளி குழந்தைகளின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்."
Comments
Post a Comment