Skip to main content

அகத்தீ - உள்ளூர் வரலாறு - திரிசூலம் மலை பயணம்

 உள்ளூர் வரலாறு

எங்கோ இருக்கும் சீன சுவரையும், நைல் நதி பற்றி தெரிந்து கொள்ளும் நாம் நம் பகுதி, ஊரில் உள்ள வரலாற்று சிறப்புகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்ள எந்த அளவிற்கு ஆர்வமும் முனைப்பும் காட்டியுள்ளோம் ?
இந்தக் கேள்வியே தாம்பரம் பகுதி சார்ந்த வரலாறுகளை தெரிந்து கொள்ளவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சென்று பார்க்கவும் காரணமாக இருந்தது.
ஆயிரம் ஆண்டுகால தாம்பரம் சுற்று வட்டார வரலாற்றை சென்று பார்த்து தெரிந்து கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்த்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளதையும் உள்வாங்கியுள்ளோம். வேகமான நகரமயமாக்கள் சூழலில் இவைகள் வேகமாக காணாமல் சென்று கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம்.
இதன் ஒரு பகுதியாக இந்த மாதம் ஒன்றாம் தேதி திரிசூலம் மலைக்கு சென்று வந்தோம்.
பயணம் தொடரும்....











Comments