Skip to main content

இயற்கைக்கு நெருக்கமாக....பச்சை மலைக்கும்,சிட்லபாக்கம் ஏரிக்கும் சென்ற பயணம்

 இயற்கைக்கு நெருக்கமாக.....

National public school, Gopalapuram Nature club யின் மாணவர்களை நேற்று தாம்பரம் சானடோரியதில் உள்ள பச்சை மலைக்கும், சிட்லபாக்கம் ஏரிக்கும் கூட்டி சென்று காட்டி அவர்களுடன் உரையாடியது நிறைவாக இருந்தது.
"கொரோனா காரணமா நிறைய செய்யனும் நினைத்து செய்ய முடியல. சென்னைக்குள இயற்கைக்கு நெருக்கமான இடங்களுக்கு மாணவர்கள கூட்டிகிட்டு போகனும்னு நினைக்கறேன். எளிமையான மலை ஏற்றமும் இருந்தா நல்லா இருக்கும்...." என்று ஆசிரியர் ரிபா கேட்டுகொள்ள, அழகாக அமைந்தது இந்த பயணம்.
விதை பந்து, உள்ளுர் வரலாறின் முக்கியதுவம், சூழலியல் சிக்கல், நகரமயமாக்கல், நூகர்வு பண்பாட்டில் இருந்து வெளிவருவதின் அவசியம், நீர் நிலைகளை பாதுகாக்க மக்கள் இயக்கங்களின் பங்கு என்று சிறப்பாக அமைந்தது சந்திப்பு.
- பாரதி கண்ணன்

























Comments