Skip to main content

 அகத்தி சமூகத்தின் குடும்ப ஒன்று கூடல்

தொடர்ச்சியாக அகத்தியின் நிகழ்வில் பங்கெடுத்த குடும்பங்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு அந்நியோனியமான நெருக்கத்தை மேலும் வலுப்பெறுவதற்கான ஒரு சந்திப்பாக இந்த ஒன்று குடல் அமைந்தது.
கடந்த 8 அக்டோபர் 2022 சனிக்கிழமை மதிய உணவுடன் பாலமுரளி தோழர் வீட்டில் ஒன்று கூடலாம் என்று முடிவு செய்தோம். நான் முதலில் சொல்ல வேண்டியது பாலமுரளி தோழர் வீடு மிகவும் அழகாக இருந்தது. முதலில் அவர்களின் பட்டுபூச்சி மணி தோரணம் எங்களை வரவேற்றது. பிறகு உள்ளே சென்றால் அவர்கள் கையால் வரைந்த ஓவிய பிரேம், நியூஸ்பெபேர் கூடை ,
ஆங்காங்கே அவர்களின் குட்டி குட்டி குடும்ப புகைப்படம் எங்களை ஈர்த்தது.
அடுத்த கட்டமாக நாங்க ஒரு வொய்ஸ்வர் மூலமாக "Survival Family" என்ற ஒரு ஜப்பானீஸ் படம் பார்த்தோம். அந்த படம் நாம் அன்றாட வாழ்வில் இருக்கும் வசதிகள் திடீர் என்று இல்லாவிட்டால் நாம் என்ன செய்வோம் என்பதை பற்றி..... மிகவும் யோசிக்கக்கூடியதாக இருந்தது.
அடுது வேற என்ன சோறு தான். ஒரு நல்ல விருந்து போல இருந்துச்சு. எல்லாரும் நல்ல சமைச்சிருந்தாங்க..... ரொம்ப சுவையான சாப்பாடு. அடுத்த கட்டமாக ஒரு உரையாடல் இந்த நிகழ்விற்கு முன்னால் நடந்த சந்திப்பை பற்றிய ஒரு உரையாடலாக இருந்தது.
அடுத்தது பாலமுரளி தோழர் உருவாக்கிய ஒரு டாக்குமெண்டரி. இந்த படம் 'புவிதம் பள்ளியை' பற்றியது. மிகவும் நன்றாக இருந்தது. இந்த படம் ஒருமணி நேரம் இருக்கும் ஆனால் இந்த படம் எடுக்க தோழரின் ஆறுமாத உழைப்பு இருக்கிறது என்று அறிந்து வியந்தேன்.
அடுத்த கட்டமாக நாங்கள் பார்த்த ஆவண படத்தில் தொடங்கிய உரையாடல். அப்பொழுதான் உரையாட தொடங்கியது போல இருந்தது. ஒரு சூடான உரையாளாக போச்சு. அடுத்து எதிர்காலத்தில் என்ன செய்வது என்ற ஒவொருவரின் எண்ணமும் தெரிந்துகொண்டோம், நல்ல ஒரு நாள். மணி கடிகாரத்தை பார்க்கும் பொழுது மணி இரவு எட்டு.
அடுத்து அனைவரும் கலையலாம் என்று முடிவு செய்தோம். அனைவர்களின் முகத்திலும் புன்னகையுடன் மறுபடியும் சந்திப்போம் என்று விடைபெற்றோம்.
- கோமதி

















Comments