அகத்தீ - உரையாடல்
அகத்தீயை பிரதிநிதிதுவபடுத்தி ஒரு வெளிநாட்டு பயணம்
கடந்த 24 டிசம்பர் 2023 மேலசியாவில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கத்தில் தாம்பரம் அகத்தீ குமுகம் சார்பாக பங்கெடுத்து "சுயமரியாதை சமூகத்திற்கான பாதையில் இயற்கை அறிவும், தற்சார்பு வாழ்வியலும்" என்ற தலைப்பில் கருத்துரையாற்றினேன். அதையொட்டி மலேசியா, சிங்கபூர் பயணத்தின் அனுபவ பகிர்வு கூட்டம் கடந்த 27 சனவரி 2024 மாலை 4.30 மணிக்கு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்தது.
பயண குறிப்புகள்
மொத்த
பயண நாட்கள் - 26
தங்கின இடங்கள் - 10
• கோலாலம்பூர்
• கெடா
• பாலத்தீனதில் அமைதி நிலவ போடபட்ட முகாமில்
• பத்து அராங் - இயற்கை விவசாய பண்ணையில்
• கிளாங்
• பெடளிங் ஜெயா
• சுங்கைசிபுட்
• சிங்கபூர்
கருத்துரையாற்றிய கூட்டங்கள் 11
அரங்க கூட்டம் - 9
பயிற்சி பட்டறைகள் - 2
பேசிய தலைப்புகள்
• பகுத்தறிவு சமூகதிற்கான பாதையில் இயற்கை அறிவும், தற்சார்பு வாழ்வியலும் - கோலாலம்பூர்
• மறை நீர் அரசியல் - புசிங், பேரா மாநிலம்
• என் பர்வையில் மலேசியா தமிழர்களும் அவர்கள் வாழ்வும் - கேடா மாநிலம்
• ஏன் சமகாலத்தை துல்லியமாக மதிப்பிட நாம் முற்பட வேண்டும் ? - புத்தககிரி, கஜாங்
• மார்க்சிய பார்வையில் பெரியார் - மலேசியா சோசலிச கட்சியின் தலைமை அலுவலகம், கோலாலம்பூர்.
• எல்லைகளை கடந்து சோசலிசம்
(Socialism Across borders ) - சோசலிச இளைஞர்கள், பெட்டலிங்க ஜெயா
• தமிழ் சமூகமும் சூழலியல் நீதியும் - மக்கள் கவிஞர் மன்றம், சிங்கபூர்
• எது வளர்ச்சி ? யாருக்கான வளர்ச்சி ? - காரை நகர் நட்பு மையம், ஜொகர் மாநிலம்
• இயற்கையோடு இயைந்த மனிதனின் கூட்டு வாழ்வு (Nature and Humam Symbiosis) - சிறகுகள் மாணவர் அமைப்பு, சுங்கைசிபுட் .
• ஐயா நம்மாழ்வார் நம் சமகாலத்தில் வாழ்ந்த தந்தை பெரியார் - மலேசியா திராவிட கழகம், சுங்கைசிபுட்
சுற்றி பார்த்த இடங்கள்
• பத்துகுகை முருகன் கோவில்
• கோலாலம்பூரில் உள்ள வணிக இடங்கள்
• கென்டிங் மலை
• கடாரம் - சோழர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் பூஜாங் பள்ளதாக்கு
• அருங்காட்சியகம், மின்மினி பூச்சி பூங்கா - செலங்கோர்
• தஞ்சன் பாய் - ஐரோப்பா ஆசியாவின் தொடர் நிலப்பரப்பின் தென்கோடி முனை
• ஒராங்க அசுலி என்று அழைக்கப்படும் மேலேசியா பழங்குடியினரின் குடியிருப்புகள்
• தமிழ் பள்ளிகள், பால் மர மற்றும் செம்பனை தோட்டங்கள்
சிங்கப்பூர்
* சானடோசா தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் மீன்களின் உலகம்
* லிட்டில் இந்தியா
* மெர்லியான் சிலை
இத்தனை ஆண்டு காலமாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கு கிடைத்த முக்கியமான அங்கிகாரமாக இந்த பயணம் அமைந்தது. ஏராளமான படிப்பினைகளையும் அனுபவத்தையும் கொடுத்த இந்த பயணத்தை வெற்றிகரமாக்கிய ஒவ்வொரு தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த என் மகிழ்ச்சியை உரிதாக்கி கொள்கிறேன்.
எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வழி அனுப்பிய தாம்பரம் அகத்தீ தோழர்களுக்கும் மற்ற நட்புவட்டங்களுக்கும், உறவுகளுக்கும், அங்கு பயண நோக்கத்தை நேர்த்தியாக திட்டமிட்டு சிறப்பா வழிநடத்தி ஆக்கபூர்வமாக கொண்டு சென்ற கருஞ்சட்டை மற்றும் மலேசியா சோசலிச கட்சி தோழர்களுக்கும் இதர நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த ஒவ்வொரு கூட்டங்களில் பேசியதை பற்றியும் பயண அனுபவங்களையும் வரும் நாட்களில் விரிவாக எழுதுகிறேன்.
இயற்கையின் அன்பால் இணைவோம்
பாரதி கண்ணன்
Comments
Post a Comment