அகத்தீ-ஒரு நல்ல திரைபடம் என்னவெல்லாம் செய்யும் ?
லப்பர் பந்து
சின்ன வயசுல தான் படத்துக்கு குடும்பத்தோட போனது... அதுக்கு அப்புறம் போகவே இல்லை... பல வருடம் கழிச்சு ஒரு நல்ல படத்துக்கு இப்படி எல்லாரும் சேர்ந்து போனது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
திரையரங்குக்கு வந்து குடும்பத்தோட படம் பார்த்து ரொம்ப வருடமாச்சு... ஆனா ஒரு நல்ல படம் பார்க்க நீங்க கூப்பிட்டு வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தோழர்...
இந்த படத்தை இரண்டாவது வாட்டி பார்க்கறேன்... எனக்கு ஆட்டம் போட்டு விசில் அடிச்சு கத்திக்கிட்டு பார்க்கணும் அப்படின்ற ரொம்ப நாள் ஆசை இந்த வாட்டி நிறைவேறிடுச்சு...
எனக்கு கூட தோணல என்னுடைய அப்பா அம்மா அண்ணி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வரணும்னு நீங்க நினைவுவச்சு கேட்டதுக்கு ரொம்ப மகிழ்ச்சி தோழர்
கொஞ்ச நாளாக மன அழுத்தத்தில் இருந்தேன்... இந்த படம் பார்த்த பிறகு இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கேன்
உங்க எல்லாரையும் பாத்துட்டு நேரம் செலவு பண்ணலாம் தான் வந்தேன் ... ஆனா இப்படி ஒரு அருமையான படமா இருக்கும்னு நினைச்சு கூட பாக்கல.
இந்த படம் எடுத்தது எங்க ஊரு சுற்றுவட்டாராம்... இதுல காட்டுற பாகுபாடு எல்லாம் உண்மை தான்...
இனிமே எங்க போனாலும் எதுக்கு போனாலும் என்ன கூப்பிட மறந்துடாதீங்க....
இதே படத்துக்கு மதிய காட்சிக்கு என் நண்பர்கள் கூப்பிட்டார்கள் ஆனா உங்களோட நான் குடும்பத்தோட வந்தது மகிழ்ச்சி
என் பிள்ளைகளுக்கு விஜய் அஜித் படங்கள் தான் தெரியும் இந்த மாதிரி நல்ல படங்களை இப்பதான் முதல் தடவையா பாக்க ஆரம்பிச்சிருக்கான்... அம்மா இன்னொரு வாட்டி இந்த படம் போய் பார்க்கலாமா அப்படின்னு கேட்டான்.....
இப்படியாக வந்தவர்கள் எல்லாம் நெகிழ்வாக பகிர்ந்து கொண்டது நிறைவாக இருந்தது.
கடந்த சனிக்கிழமை ' அடேங்கப்பா 40 ' பேர் சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கில் லப்பர் பந்தை கொண்டாடி தீர்த்தோம்.
வரும் சனிகிழமை
13 / 10 / 2014
மாலை 5 மணிக்கு
' லப்பர் பந்து ' திரைபட விமர்சனம் அனுபவ பகிர்வு
சிட்லபாக்கம் ஏரிகரை
Comments
Post a Comment