அகத்தீ - பெரும் கனவின் சிறு தொடக்கம்..
தகை
அகத்தீ முன்னெடுப்பு
நகர வாழ்க்கையின் பின்னணியில் நஞ்யில்லாத உணவு, சுவரில்லா கல்வி, மருந்தில்லா மருத்துவம், ரசாயனம் இல்லாத வீடு, அறம் சார்ந்த வாழ்வியல், ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் இல்லாத சமூகம் என்ற தேடலில் தொடர்ச்சியாக இணைந்து பயணப்பட்டதை ஒட்டி கூடுவதற்கும் உரையாடுவதற்கும் அறிவு பரிமாற்றத்திற்கும், அன்பை பகிர்வதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பொதுவான இடம் என்பது அத்தியாவசியமானதாக மாறியது.
நமக்கான ஒரு இடம் என்று அமையும் போது ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான வேலைகள், ஆற்றல் மிகுந்த புதிய மனிதர்களின் அறிமுகம், நம்பிக்கை அளிக்கும் செயல்கள் போன்றவை இடத்திற்கான தேவையை மென்மேலும் அதிகப்படுத்தியது. அதன் நீட்சியே 'தகை'
இந்த ஆண்டு தை 1 அன்று எளிமையாக தொடங்கியதிலிருந்து கடந்த மாதம் நிறைவான சில நிகழ்வுகளை சாத்தியப்படுத்தியதுடன், நமக்கான ஒரு வெளியின் தேவையை உயிர்ப்பாக்கியது தகை.
மாலை நேரங்களில் ஓவிய வகுப்பு தொடங்கியாகிவிட்டது...
அடுத்தடுத்து நிகழ்வுகளை இங்கு நடத்துவதற்கு நட்பு வட்டங்களின் அழைப்பும் வரத் தொடங்கி விட்டது...
*பரதநாட்டியம் வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளது
*ரோபோடிக்ஸ் கற்றுக் கொடுக்கவும்
*ஆங்கிலமும், பொதுவெளியில் பேசுவதற்கான பயிற்சி கொடுக்கவும்
நண்பர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
* மருத்துவ முகாம்
* சட்ட ஆலோசனை கூடம்
* முதியோர்களுக்கான உதவி கூடம்
* சிறார்களுக்கான விளையாட்டுடன் கூடிய பயிற்சி வகுப்புகள்
* இயற்கை விவசாய பொருட்களுக்கான விற்பனை சந்தை
* பகிர்ந்து வேலை செய்யும் இடம்
போன்றவைகளை வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி மாணவர்களுக்கான தனி பயிற்சி யோகா மற்றும் பல பயனுள்ள பயிற்சிகளை கொடுக்க நண்பர்களை வரவேற்கிறோம்.
இயற்கையின் அன்பால் இணைவோம் !
Comments
Post a Comment