அகத்தீ-சிறுவர்களுக்கான வீட்டு தோட்டப் பயிற்சி
கடந்த 14-06-2025 சனிக்கிழமை மாலை அகத்தீ சார்பில் மேற்கு தாம்பரத்தில் உள்ள பவர் போனிக்ஸ் (Power Phonics ) கற்றல் மையத்தில் சிறுவர்களுக்கான வீட்டு தோட்ட பயிற்சி நடத்தினோம். அதில் பங்கு பெற்ற குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்முறை விளக்கங்களில் ஈடுபட்டனர், இதில் அவர்கள் இடத்தை சுத்தம் செய்தல், களையெடுத்தல், மண்ணை உழுதல், முன்னேற்றம் ஏற்றுதல், மேட்டு பாத்தி அமைத்தல், செடி, விதை நடவு ஆகியவற்றை கற்றுக்கொண்டனர்.
மிகவும் ஆச்சரியப்பட கூடியது என்னவென்றால் அனைவருமே மண்வெட்டியை பிடிக்க வேண்டும் என்று அடம் பிடித்தனர்.... நம்புவோம்!!! இன்று மண்வெட்டிக்காக அடம் பிடித்து குழந்தைகள் நாளை சூழலுக்காகவும் விவசாயத்திற்காகவும் களம் காணுவார்கள் என்று...
சிறுவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்த தோழன் அருள் முருகன் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments
Post a Comment