அகத்தீ--வீட்டுத் தோட்ட பயிற்சி
30/08/25
வீட்டு தோட்டத்தை அமைப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான பயிற்சியாக இது இருந்தது.
விதை தேர்ந்தெடுப்பு
ஊடுபயிர்
மூடாக்கு
உயிர் உரம்
பூச்சிக் கட்டுப்பாடு
நஞ்சில்லா உணவின் முக்கியத்துவம்
என்பதை பற்றியான அறிமுக நிகழ்வாக இருந்தது.
பயிற்றுனர் நீலா கிருஷ்ணன் அவர்களின் முன்னெடுப்பான வானகா சார்பாக விதைகள்,வெண்டைக்காய் காராமணி மற்றும் அவர்களே உற்பத்தி செய்து தயார் செய்த மதிப்பு கூட்டின பொருட்கள் விற்பனைக்கு இருந்தது.
இதனுடன் தகை சமூக கூடத்தில் மக்கு உரம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதையும் விளக்கினோம்.
பங்கெடுத்த அனைவரும் ஆர்வத்துடனும் முனைப்புடனும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டது நிறைவாக இருந்தது.
தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் அகத்தீ குழுவில் இணையவும்
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8?mode=ac_t
Comments
Post a Comment