'தமிழும் இயற்கையும்' - 2025-26
https://chat.whatsapp.com/KdksCAqt5TJ9PMMAS8hABk
போட்டி விவரங்கள்:
எண் | போட்டி | கால அளவு | விவரங்கள் |
| 1 | கட்டுரை | 30 நிமிடம் | கொடுக்கப்பட்ட தலைப்புகளில் 2 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். |
| 2 | கதை சொல்லல் | 15 நிமிடங்கள் நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். | ஒரு பக்கக் கதையை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். |
| 3 | கவிதை | 30 நிமிடங்கள் நிகழ்வின் போது கொடுக்கப்படும் பொதுவான தலைப்பிலும் கவிதை எழுத வேண்டும். | போட்டிக்காக கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சொந்தமாகக் கவிதை எழுதி முன்பே அனுப்ப வேண்டும் |
| 4 | ஓவியம் | 1 மணி நேரம் | வெள்ளை வரைதாள் வழங்கப்படும். மற்ற உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். |
| 5 | உரைவீச்சு | 15 நிமிடங்கள் | கொடுக்கப்பட்ட தலைப்புகளில் மாணவர்கள் பேச வேண்டும். |
| 6 | பாட்டு | 10 நிமிடங்கள் | இயற்கை மற்றும் தமிழ் பெருமையை உணர்த்தும் பாடல்களைப் பாட வேண்டும். ( நாட்டுப்புறப் பாடல்கள் / 1980கள் வரை உள்ள திரைப்படப் பாடல்கள்) |
| 7 | வினாடி வினா | 1 மணி நேரம் நிகழ்வின் கருவிலிருந்து கேள்விகள் வரும். | 2 பேர் கொண்ட குழு. போட்டிக்குத் திறன்பேசி (Smartphone) அவசியம். 3 சுற்றுகள் நடைபெறும். |
| 8 | நூல் திறனாய்வு | 10 நிமிடங்கள் நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். | 2 பக்கங்களுக்குள் நூல் திறனாய்வை முன்பே சமர்ப்பிக்க வேண்டும். |
| 9 | குறும்படம் | 10 நிமிடங்கள் நடுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். | 2 நிமிடக் குறும்படத்தை முன்பே சமர்ப்பிக்க வேண்டும். நிகழ்வின் கருவே தலைப்பு. |
| 10 | எதிரும் புதிரும் | 10 நிமிடங்கள் | ஒரு தலைப்பில் இரண்டு பக்கம் உள்ள முரண்களையும் பேச வேண்டும் |
| 11 | தனித்திறன் | 10 நிமிடங்கள் | தமிழும் இயற்கையும் என்ற கருப்பொருளில் ஒரு நபர் நாடகம் (Mono-acting), மௌன நாடகம் (Mime), மேடை நகைச்சுவை (Stand-up Comedy) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். |
போட்டிகளுக்கான தலைப்புகள்:
எண் | போட்டி | அனைத்து பிரிவு மாணவர்களுக்கான பொதுவான தலைப்புகள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுக்கவும். | |||
| 1 | கட்டுரை | பல்லுயிர் ஓம்புதல் | வாழும் நகரங்கள் | எந்த உயிரினமும் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது | உங்கள் ஊர் வரலாறு (எ.கா: தாம்பரம்) |
| 2 | கதை | இயற்கையின் அன்பால் இணைவோம் | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | இயற்கையும் மனிதனும், முரண்பாடுகளின் முரண் | சொந்தக் கதை : தமிழும் இயற்கையும் மையப்படுத்தி |
| 3 | கவிதை | 'காக்கை குருவி எங்கள் ஜாதி' | 'சிறியதே அழகு' | 'இந்தபூமி நமக்குச் சொந்தமல்ல' | 'நஞ்சில்லாத உழவே தலை' |
| 4 | ஓவியம் | நான் அறிந்த பூவுலகு | சூடாகும் பூமி | நெகிழிப் பூதம் | சென்னை வெள்ளம் |
| 5 | உரைவீச்சு | நீங்கள் அறிந்த சூழல் போராளி (நம்மாழ்வார் தவிர்த்து) | திணைக் கோட்பாடு சொல்லும் வாழ்வியல் | அழிவின் வளர்ச்சியும் வளர்ச்சியின் அழிவும் | தமிழ் இயற்கையின் மொழி |
| 6 | நூல் திறனாய்வு | மறைநீர் | இனி விதைகளே பேராயுதம் | மௌன வசந்தம் | நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கான நூலை தேர்ந்தெடுக்கலாம் |
| 7 | எதிரும் புதிரும் | இயற்கை விவசாயமும் நவீன விவசாயமும் | நவீன மருத்துவமும் பாரம்பரிய மருத்துவமும் | மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்: தேவையா? இல்லையா? | உணவே மருந்து, மருந்தே உணவு |
பரிசுகள்:
- பங்கெடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழுடன் சூழலியல் சார்ந்த நூல்கள் பரிசளிக்கப்படும்.
- வெற்றி பெறும் மாணவர்களை, மாதிரி இயற்கை வேளாண் பண்ணை மற்றும் சூழலியல் முக்கியதுவம் வாய்ந்த இடங்களுக்கு இலவசக் களப்பயணம் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- வெற்றி பெறும் முதல் மூன்று பள்ளிகளுக்கு, பள்ளி வளாகத்தில் காய்கறி / மூலிகை தோட்டம் / நாற்று பண்ணை அமைத்துத் தரப்படும்.
- சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்குத் தனித் திறன் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு.
- வெற்றியாளர்களுக்கு நஞ்சில்லாத ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்களுக்கான கூப்பன் வழங்கப்படும்.


Comments
Post a Comment