Skip to main content

சூழலியல் கள ஆய்வு - அறிவியல் பூர்வமான அனுகுமுறை

 அகத்தீ-- சூழலியல் கள ஆய்வு

வெள்ள பாதிப்பை புரிந்து கொள்ள அறிவியல் பூர்வமான அனுகுமுறை

சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள வடிகால் கால்வாய்கள் பலவற்றை மூடியதாலும் நீர்வழிப் பாதை மற்றும் புறம்போக்கு நிலங்களை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்ததாலும் ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மிகுந்த வெள்ள அபாயத்தை சந்தித்து வருகின்றன. இதனை ஒட்டி தாம்பரம் மக்கள் குழு நடத்தி வரும் சட்டம் மற்றும் அறிவியல் வழியான நடவடிக்கைகளில் வியாசை தோழர்கள், (Youth Climate Resilience Movement) மற்றும் சென்னை காலநிலை செயல்பாட்டு குழு இணைந்து முதல் கட்ட கலந்தாய்வு நடத்தியுள்ளோம். இதை ஒட்டி தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்நிலை பாதுகாப்பு இயக்கமான சிட்லபாக்கம் ரைசிங் குழு தோழர்களையும் சந்தித்து கலந்துரையாடினோம். ( 02/11/2025)
வியாசை பகுதியில் நடத்தி வரும் QGIS ஆய்வு முறைகளை வியாசையின் இளைஞர்கள் அகத்தி சிறார்களுக்கு கற்றுக் கொடுத்து இணைந்து பயணிக்கும் ஒரு அரிய வாய்ப்பு அமைந்துள்ளது. இது அனைவரின் எதிர்காலத்திற்கான முயற்சியாகும்.
தகையில் நடந்த பள்ளி மாணவி ஆராவின் பிறந்தநாள் அன்று இதைப்பற்றி சிறுவர்கள் மத்தியில் சிறப்பான அறிமுகம் கொடுத்த 11வது படிக்கும் வியாசை தினேஷ் அவர்களுக்கு நன்றி.
Chennai Climate Action Group / Tambaram People's Forum / Agathi

Comments